சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத் தணிக்கையின்போது தெரியவந்த குறைபாடுகள்
வாசிப்புநேரம் -
படம்: Mediacorp
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் குறித்து நடத்தப்பட்ட தணிக்கையின்போது சங்கத்தில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சட்ட அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) கூறியிருக்கிறார்.
தலைமைத்துவம், வேலையிடக் கலாசாரம், நிர்வாகம் ஆகியவற்றில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்தக் குறைபாடுகள் 2022ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தன.
என்றபோதும் வேண்டுமென்றே செய்யப்பட்ட நிதி முறைகேடுகள் அல்லது தவறுகளை வேண்டுமென்றே மூடிமறைக்கும் முயற்சிகள் ஆகியவற்றைப்பற்றி எந்த ஆதாரமும் விசாரணையில் தெரியவில்லை என்றார் திரு தோங்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் எழுத்துபூர்வ பதிலளித்தார்.
ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால் (Wan Rizal) சங்கத்தில் இருந்த வேலையிடப் பிரச்சினைகள் பற்றிய விசாரணையின் முடிவுகளைப் பற்றி சட்ட அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்று கேட்டிருந்தார்.

ஆதாரம் : CNA