சிங்கப்பூருக்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்
கோப்புப் படம்: Ministry of Digital Development and Information
This audio is generated by an AI tool.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) இன்று சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார்.
அவர் சனிக்கிழமைவரை (ஏப்ரல் 11) சிங்கப்பூரில் இருப்பார்.
சிங்கப்பூர் - ஆஸ்திரேலிய உறவு சென்ற அக்டோபரில் மேம்படுத்தப்பட்ட பின்னர் திரு ஆல்பனீசி சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் திரு ஆல்பனீசியைச் சந்திப்பதோடு அவருக்கு மதிய விருந்தளிப்பார்.
திரு ஆல்பனீசி ஜூரோங் தீவிலிருக்கும் சிங்கப்பூர் திரவ இயற்கை எரிவாயு முனையத்திற்கும் சிங்கப்பூர் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைக்கும் செல்வார்.
மத்திய கிழக்கு நிலவரத்தால் இரு நாடுகளும் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம் தெரிவித்தன.