Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆஸ்திரேலியாவில் தடம் பதிக்கும் சிங்கப்பூரர்....Australian Idol போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடகர்களில் ஒருவர்....

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் தடம் பதிக்கும் சிங்கப்பூரர்....Australian Idol போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடகர்களில் ஒருவர்....

Instagram/kartikkuna

சிங்கப்பூரில் பிறந்த கார்த்திக் குணசேகரன் ஒரு மருத்துவராக வேண்டும் என்று அவருடைய தந்தை மனக்கோட்டை கட்டியிருந்தார்.

ஆனால் கார்த்திக் வேறு திட்டம் வைத்திருந்தார்.

அவர் பாடகராக வேண்டும் என உறுதியாக இருந்தார்.

சிறு வயதிலேயே கார்த்திக்கும் அவரது குடும்பத்தினரும் ஆஸ்திரேலியாவிற்குக் குடியேறியதாக 8 Days கூறியது.

தற்போது சிட்னியில் (Sydney) வசிக்கும் அவர் Australian Idol எனப்படும் பாட்டுத்திறன் போட்டியில் கலந்துகொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடகர்களில் கார்த்திக்கும் ஒருவர்.

"சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த நாள்கள் நன்றாகத்தான் இருந்தன. அங்குக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. ஆஸ்திரேலியாவிற்கு வந்த பின்னர் இசையில் எனக்கு ஆர்வம் எழுந்தது," என உற்சாகம் பொங்கக் கூறினார்.

Australian Idol போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகனைக் கண்டு அவரது தந்தை பெருமை அடைந்தார்.

"கடந்த மாதம் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. என் மகன் இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டதில் பேரின்பம் அடைகிறேன்," என அவர் சொன்னார்.

2014இல் கார்த்திக் தமது தேசிய சேவையை ஆற்ற சிங்கப்பூருக்குத் திரும்பியதாக 8 Days கூறியது.

அந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்டு அவர் பாடியிருந்தார்.
ஆதாரம் : 8 Days

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்