Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆகாயப் போக்குவரத்துத் துறைக்கு ஆதரவளிக்க 500 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும்: அமைச்சர் ஈஸ்வரன்

வாசிப்புநேரம் -
ஆகாயப் போக்குவரத்துத் துறைக்கு ஆதரவளிக்க 500 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும்: அமைச்சர் ஈஸ்வரன்

(கோப்புப் படம்: CNA)

விமானப் பயணங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பதால் விமானத்துறை நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆதரவளிக்க, எதிர்வரும் நிதியாண்டில் 500 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் S ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க, OneAviation மீள்திறன் திட்டம் உதவும் என்றார் அவர்.

அனைத்துலக விமானப் போக்குவரத்து நடுவம் எனும் சிங்கப்பூரின் நிலையை மீண்டும் கட்டிக்காக்க அது கைகொடுக்கும் என்று அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

$500 மில்லியன் OneAviation மீள்திறன் திட்டத்தில்...

$60 மில்லியன் - துறையின் ஊழியரணியை அதிகரிக்க ஒதுக்கப்படும். உள்ளூர் ஊழியர்களின் 6 மாத ஊதியத்தில் 10 விழுக்காட்டுத் தொகை நிறுவனங்களுக்கு
மானியமாக வழங்கப்படும்.

$390 மில்லியன் - பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும்.

$50 மில்லியன் - ஆகாயப் போக்குவரத்துத் துறை மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும். அதன்வழி வேலை உருமாற்ற முயற்சிகளுக்கு நிதி வழங்கப்படும்.

உலகளவில் எல்லைக் கட்டுப்பாடுகள்
தளர்த்தப்படும் வேளையில், அதற்கேற்ப செயல்படுவதற்கு ஆகாயப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான ஆற்றல்கள் இருப்பது அவசியம்.

COVID-19 கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட துறை ஆகாயப் போக்குவரத்து என்பதைப் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்