Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 தொற்றிய ஒன்றரை வயதுக் குழந்தையின் மரணத்தால் பயப்படவேண்டாம்: மருத்துவர்கள்

வாசிப்புநேரம் -
COVID-19 தொற்றிய ஒன்றரை வயதுக் குழந்தையின் மரணத்தால் பயப்படவேண்டாம்: மருத்துவர்கள்

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் ஒன்றரை வயதுக் குழந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து பீதியடையத் தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய புதுவகைக் கிருமிகளால் குழந்தைகளுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று அவர்கள் கூறினர்.

கோவிட் நோய்த்தொற்றால் Basharath Ali Ashraff Ali என்ற குழந்தை சென்ற மாதம் 27ஆம் தேதி மாண்டது.

கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு வேறு சில மருத்துவச் சிக்கல்கள் ஏற்பட்டன. 

அத்தகைய சம்பவங்கள் அரிதானவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள முதல் குழந்தை இறப்பு, சிறாரிடத்தில் நோய்த்தொற்றுப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு COVID-19 தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

5 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படக்கூடிய தடுப்புமருந்தின் பாதுகாப்பையும் ஆற்றலையும் ஆராய்வதாகச் சுகாதார அமைச்சு கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa