Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பரிதாப நிலை: போதைப்பொருளுக்கு அருகில் கிடந்த 9 மாதக் குழந்தை...

வாசிப்புநேரம் -
பரிதாப நிலை: போதைப்பொருளுக்கு அருகில் கிடந்த 9 மாதக் குழந்தை...

(Facebook / CNB Drug Free SG)

போதையர் ஒருவரின் வீட்டில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் 9 மாதக் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

போதைப்பழக்கம் கொண்ட அதன் தாயாரின் வீட்டில், "ice" எனும் போதைப்பொருளுக்கு மிக அருகில் அந்தக் குழந்தை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

அந்தத் தாய் போதைப்பொருளைக் குழந்தைக்கு மிக அருகிலிருந்தபடி உட்கொண்டதாகவும் நம்பப்படுகிறது. குழந்தையின் ஒரே பராமரிப்பாளர் அவர். 

போதைப்பொருளும் அதற்கான சாதனங்களும் நிறைந்த மிக அசுத்தமான வீட்டில் இருவரும் தங்கியிருந்ததாகப் பிரிவு அதன் Facebook பக்கத்தில் சொன்னது. 

அந்தக் குழந்தையை நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் அதிகாரிகள். அதற்குத் தேவையான பராமரிப்பு, பால் மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அளிக்கப்பட்டன. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அதன் தாய் போதையர் மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார். 

 போதைப்பொருள் பலரின் வாழ்வை எவ்வாறு கெடுக்கிறது என்பதை இத்தகைய சூழ்நிலைகள் உணர்த்துகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa