Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளி தொடங்குகிறது... பெற்றோர், மாணவர்களின் கருத்து?

விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் இன்று மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -

விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் இன்று மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கி, இதுவரை சுமார் 20,000 பிள்ளைகள் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

ஓமக்ரான் கிருமி வேகமாகப் பரவும் சூழலில் பள்ளிக்குத் திரும்பும் பிள்ளைகள் தடுப்பூசி போட்டிருப்பதில் சற்று ஆறுதல் எனக் கூறும் பெற்றோரில் திருமதி வசந்தி கண்ணனும் ஒருவர்.

கடந்த ஆண்டுவரை பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏதும் இல்லை. அதனால் பள்ளிக்கு அனுப்புவதற்குப் பெற்றோர் சற்றுத் தயங்கினர்

என்றார் அவர்.

இந்த வருடம் தொடக்கநிலை 4இலிருந்து 6வரை பயிலும் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியதால் பள்ளிக்கு அனுப்புவது மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதை அவர் குறிப்பிட்டார்.

கிருமிப்பரவல் நீடித்தாலும் பள்ளிக்கு மீண்டும் செல்வதில் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிதான்.

நான் என் நண்பர்களையும் ஆசிரியர்களையும் நீண்டநாள் கழித்துப் பார்க்கிறேன்.

என்றார் மாணவர் ஆனந்த கண்ணன் ஹர்ஷித்.

எல்லாரும் தடுப்பூசி போட்டிருப்பர் என்பதால் பள்ளிக்குச் செல்வதில் அச்சமில்லை என்றும் ஹர்ஷித் சொன்னார். அவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa