Skip to main content
ஊழல் வழக்கின் தொடர்பில் இந்தோனேசியா கோரும் தொழிலதிபர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழல் வழக்கின் தொடர்பில் இந்தோனேசியா கோரும் தொழிலதிபர் - தொடர்ந்து சிங்கப்பூர்த் தடுப்புக்காவலில்

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் ஊழல் வழக்கில் தொடர்புடையவர் என்று நம்பப்படும் தொழிலதிபர் போலஸ் தானோஸ் (Paulus Tannos) தொடர்ந்து சிங்கப்பூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது மருத்துவ அறிக்கை நிலுவையில் உள்ளது.

தானோஸ் 2017ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூரில் இருக்கிறார்.

அவருக்கு ஜின் தியான் போ (Tjhin Thian Po) என்று இன்னொரு பெயர் உண்டு. அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி.

அவர் இந்தோனேசிய அரசாங்கத்தின் மின்னியல் அடையாள அட்டைத் திட்டம் தொடர்பான ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால் இந்தோனேசிய அரசாங்கத்துக்கு 140 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் சிங்கப்பூரில் ஜனவரி 17ஆம் தேதி லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவால் கைதுசெய்யப்பட்டார்.

அவரைத் திருப்பி அனுப்பும்படி இந்தோனேசியாவிடமிருந்து ஆவணங்களோடு பிப்ரவரி 24ஆம் முறையான விண்ணப்பம் வந்தது.

அதை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

அவரை இந்தோனேசியாவுக்கு அனுப்புவதைத் துரிதப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகச் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்த 3 நாள் கழித்து, இன்று தானோஸின் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது.

அவருடைய வழக்கறிஞர் அவருக்குப் பிணை வழங்கும்படி விண்ணப்பம் செய்தார்.

வழக்கு இம்மாதம் (மார்ச்) 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதுவரை தானோஸ் தடுப்புக்காவலில் இருப்பார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்