Skip to main content
500 கிலோகிராம் கரி வைத்திருந்த உலர்ந்த இறைச்சிக் கடையில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

500 கிலோகிராம் கரி வைத்திருந்த உலர்ந்த இறைச்சிக் கடையில் தீ

வாசிப்புநேரம் -
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இருக்கும் bak kwa எனும் உலர்ந்த இறைச்சிக் கடை ஒன்றில் தீப்பற்றியது.

சம்பவம் இன்று நடந்தது.

காலை சுமார் 11.40 மணியளவில் 30 டன்லப் ஸ்ட்ரீட்டில் (Dunlop Street) அமைந்துள்ள அக்கடையில் தீப்பற்றியது குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

நீர்பாய்ச்சும் குழாய் மூலம் தீ அணைக்கப்பட்டது என அது குறிப்பிட்டது.

விபத்தில் ஒருவருக்கு மூச்சுத் திணறலும் மற்றொருவருக்குச் சிறிதளவு காயமும் ஏற்பட்டன. ஆனால் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.

தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.

கடையின் உரிமையாளர் சிம்பியன் சுவா (Simbian Chua) கடை தீப்பற்றி எரியும் காணொளியைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

கடையில் அப்போது சுமார் 500 கிலோகிராம் கரி இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்கள் இன்று பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவு செய்த உலர்ந்த இறைச்சி ஓரிரு நாள் தாமதமாக அனுப்பப்படும் என்றார் சுவா.

பணத்தைத் திரும்பப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு முழுத் தொகையும் திருப்பிக் கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்