Skip to main content
Balestier Road
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

Balestier Road - ஒரு காலத்தில் சிங்கப்பூருடைய ஹாலிவூட் என்று தெரியுமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூருக்கான முதல் அமெரிக்கத் தூதர் திரு ஜோசஃப் பேலஸ்டியருடைய (Joseph Balestier) பெயர்தான் சாலைக்கு வைக்கப்பட்டது.

அவர் அங்கு கரும்புத் தோட்டத்தை அமைத்ததால் அவருடைய பெயர் வந்தது.

பேலஸ்டியருடைய கரும்புத் தோட்டத்தில் ஒரு நாளுக்கு 2,000 கிலோகிராமுக்கு மேல் சர்க்கரையை உற்பத்தி செய்ய முடிந்தது.

இந்தச் சாலையைப் பொழுதுபோக்குச் சாலை என்றும் அழைப்பார்கள்.

இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப், சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் (Indian Sports Club, Ceylon Sports Club) ஆகிய இடங்கள் பேலஸ்டியர் ரோட்டில் அமைந்திருந்தன.

இன்னமும் அங்குதான் இருக்கின்றன.

தமிழர்களும் பேலஸ்டியர் ரோட்டை அவர்களுடைய பாணியில் அழைத்தார்கள்.

அதுதான் தண்ணீர்க் கம்பம்.

பேலஸ்டியர் ஆற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் நீர் எடுக்கப்பட்டது.

அந்த நீர் நகரங்களில் விற்பனை செய்யப்பட்டது.

இயற்கையான சூழல் கொண்ட அந்த இடம் 1960களில் சிங்கப்பூருடைய திரையுலகமாக மாறியது.

Hoover திரையரங்கம், Ruby திரையரங்கம்..

அங்கு பல திரையரங்குகள் இருந்திருக்கலாம்... ஆனால் அந்த 2 திரையரங்குகள் மிகவும் பிரபலமாக இருந்தன.

ஆங்கில, சீன, இந்திய மொழித் திரைப்படங்கள் அங்கு காட்டப்பட்டன.

ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை.

திரையரங்குகள் இருந்த இடத்தில் கடைத்தொகுதிகள் கட்டப்பட்டன.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்