Skip to main content
கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது: தேர்தல்துறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது: தேர்தல்துறை

வாசிப்புநேரம் -
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பர் என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை வெளியிட அனுமதி இல்லை.

பொதுத்தேர்தல் வரும் மே 3ஆம் தேதி நடைபெறும்.

பொதுத்தேர்தல் காலக்கட்டத்தின்போது கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

அவற்றில் வாக்காளர்கள் வேட்பாளர்கள் பற்றி கொண்டுள்ள கருத்துகளும் அவர்கள் எவ்வாறு வாக்களிக்கக்கூடும் என்ற முன்னுரைப்பும் தெரிவிக்கப்படும்.

அதன் முடிவுகளை வெளியிட அனுமதி இல்லை என்பதைத் தேர்தல்துறை நினைவூட்டியது.

சமூக ஊடகத்தளங்கள், இணையத்தளங்கள், குறுந்தகவல் ஆகியவற்றிலும் முடிவுகளை வெளியிடவோ பகிரவோ கூடாது என்றும் அது கூறியது.

அவ்வாறு செய்வது தேர்தல் சட்டப்படி குற்றம் என்று தேர்தல்துறை குறிப்பிட்டது.

 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்