வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரைச் சுத்திகரிப்பதா?

Unsplash/Louis Hansel
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பழங்களின் கழிவைக் கொண்டு தண்ணீரைச் சுத்திகரிக்க வழி கண்டுபிடித்துள்ளார்.
அதன்வழி உணவுக்கழிவுகளையும் குறைக்கமுடியும்.

துணைப் பேராசிரியர் எடிசன் ஆங்கின் (Edison Ang) கண்டுபிடிப்புக் குறித்து பல்கலையின் Facebook பக்கத்தில் பகிரப்பட்டது.
வாழைப்பழத் தோல், தேங்காய் மூடி, ஆரஞ்சுத் தோல் போன்ற பழக்கழிவுகளைக் கொண்டு MXenes எனும் மூலப்பொருள் உருவாக்கப்படுகிறது.
எஃகை விடப் பலமடங்கு வலிமையான அந்த மூலப்பொருள் மிகவும் இலேசாக இருக்கும்.
MXenesக்கு மின்சாரம் பாய்ச்சும் ஆற்றலும் வெளிச்சத்தை வெப்பமாக்கும் ஆற்றலும் மிகவும் அதிகம்.
துணைப் பேராசிரியர் ஆங் Distillation எனும் தண்ணீர்ச் சுத்திகரிப்பு முறையில் மூலப்பொருளைப் பயன்படுத்துகிறார்.
Distillation
Distillation எனும் தண்ணீர்ச் சுத்திகரிப்பு முறையில், தண்ணீர் கொதிக்கவைக்கப்படுகிறது.
அதிலிருந்து வெளியேறும் நீராவி மீண்டும் நீராகும் வரை குளிரூட்டப்படும்.
அதற்குப் படிம எரிபொருள்களும் தகுந்த உள்ளமைப்புகளும் அவசியம்.
துணைப் பேராசிரியர் ஆங் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு solar stills எனும் அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்.
solar stills முறையில் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்குச் சூரிய வெளிச்சம் பயன்படுத்தப்படுகிறது. படிம எரிபொருள் அவசியமில்லை.
MXenes சூரிய வெளிச்சத்தை வெப்பமாக்குவதன்வழி தண்ணீரை ஆவியாக்கும்.
சுத்தமான நீர் அல்லது எரிபொருள் அவ்வளவாக இல்லாத பேரிடர் இடங்களிலும் வளர்ச்சி இல்லாத இடங்களிலும் புதிய கண்டுபிடிப்பைப் பயன்படுத்தமுடியும்.