Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோசடியில் பறிபோன பணம் - முழுமையாகத் திருப்பிக் கொடுப்பது வங்கியின் பொறுப்பா?

வாசிப்புநேரம் -
மக்கள் மோசடிகளில் இழந்த பணத்தை வங்கிகள் முழுமையாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் (Sylvia Lim) கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசடிகளைக் கையாள்வதில் வங்கிகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் மோசடிகளில் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மோசடிகளைக் கண்டறிவது சிரமமாகிக்கொண்டே போவதை அவர் சுட்டினார்.

மோசடிகளில் இழந்ததை விடக் குறைந்த தொகையை வங்கிகள் வழங்குவது, அதைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது என வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்வது ஆகியவற்றை தடுக்கச் சிங்கப்பூர் நாணய வாரியம் அவ்வப்போது வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று திருவாட்டி லிம் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த கலாசார, சமூக, இளையர், வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் (Alvin Tan), வங்கிகள் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியாயமல்ல என்றார்.

அது விரும்பத்தக்கது அல்ல என்றும் அவர் சொன்னார்.

அவ்வாறு செய்தால் மக்களிடையே விழிப்புணர்வு குறைந்துவிடும்; மெத்தனப் போக்கு அதிகரித்துவிடும் என்று திரு. டான் கூறினார்.

மோசடிகளைக் கையாள பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதுடன், மோசடி அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் தடை செய்ய Scamshield செயலி போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்