Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பேனாக்கத்தியால் ஆசிரியரைத் தாக்கிய உயர்நிலைப்பள்ளி மாணவர் கைது

வாசிப்புநேரம் -
பேனாக்கத்தியால் ஆசிரியரைத் தாக்கிய உயர்நிலைப்பள்ளி மாணவர் கைது

(படம்: Google Street View)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய பார்ட்லி உயர்நிலைப்பள்ளி மாணவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

அந்த ஆசிரியர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் பள்ளி CNAயிடம் கூறியது.

அவர் மருத்துவ விடுப்பில் உள்ளதாகப் பள்ளியின் தலைமை முதல்வர் பிரிட்டா சீட் (Britta Seet) தெரிவித்தார்.

ஆசிரியர் குணமடைந்து வருவதாகவும் காவல்துறையில் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட மாணவர் பள்ளிக்குத் திரும்பவில்லை என்றும் அவர் சொன்னார்.

மாணவர், அவரின் பெற்றோர் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகத் திருவாட்டி சீட் கூறினார்.

மாணவருக்கும் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கும் ஆதரவு வழங்கப்படும் என்றார் அவர்.

நேற்று முன்தினம் (28 ஏப்ரல்) மதியம் 12.25 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை CNAயிடம் தெரிவித்தது.

ஒருவர் டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அது சொன்னது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்