Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டடங்கள் உறுதியாக உள்ளனவா? அவை எப்படிச் சோதிக்கப்படும்?

ஆணையம் கொடுக்கும் பரிந்துரைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்வது கட்டட உரிமையாளரின் பொறுப்பு.

வாசிப்புநேரம் -
கட்டடங்கள் உறுதியாக உள்ளனவா? அவை எப்படிச் சோதிக்கப்படும்?

(கோப்புப் படம்: நித்திஷ் செந்தூர்)

சிங்கப்பூரில் தரைவீடுகளைத் தவிர்த்து அனைத்து குடியிருப்புக் கட்டடங்களிலும் கட்டுமானச் சோதனைகளைப் பத்தாண்டுக்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.

வர்த்தகக் கட்டடங்களில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை அத்தகைய சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதைக் கட்டாயமாக்கியுள்ளது கட்டட, கட்டுமான ஆணையம்.

1920களில் கட்டப்பட்டது லிட்டில் இந்தியா வட்டாரத்தின் டிக்சன் ரோட்டில் அமைந்துள்ள வாண்டர்லஸ்ட் ஹோட்டல் (Wanderlust Hotel). 

(படம்: Facebook/Lee Hwa)

இதைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்? கட்டடங்களின் உறுதி எப்படிச் சோதித்துப் பார்க்கப்படுகிறது?

அது குறித்துக் கேட்டறிந்தது செய்தி.

கட்டடங்களில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டால் அத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கலாம்

என்றார் கட்டட, கட்டுமான நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் திரு. அண்ணாமலை கிருஷ்ணன். 

  • கட்டடத்தின் கட்டுமான அம்சங்கள், கட்டமைப்பு போன்றவற்றைப் பொறியாளர் சோதனையிடுவார். அவர் கட்டட,கட்டுமான ஆணையத்தில் பதிவு செய்த நிபுணராக இருக்க வேண்டும்.
  • கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றால் உண்டாகக்கூடிய அபாயங்கள் மதிப்பிடப்படும்.
  • கட்டடம் பாதுகாப்பானதா... அதற்குள் பிறரை அனுமதிக்கலாமா... என்பது குறித்து ஆராயப்படும்.
  • அதனையொட்டி ஆணையத்திடம் பரிந்துரைகளைப் பொறியாளர் முன்வைப்பார்.
  • பிரச்சினை ஏதும் இல்லை என்றால் கட்டடத்தின் நம்பகத்தன்மை குறித்து சான்றிதழ் வழங்கப்படும்.
  • பொறியாளர் மேற்கொண்டு விசாரணை தேவைப்படுவதாகக் கருதினால் அதற்கும் கோரிக்கை விடுக்கலாம்.
  • ஆணையம் பரிந்துரைகளையும் அறிக்கையையும் ஆய்வுசெய்யும். கட்டடத்தை ஆணைய அதிகாரிகளும் தேவைப்பட்டால் சோதனையிடலாம்.
  • ஆணையம் கொடுக்கும் பரிந்துரைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்வது கட்டட உரிமையாளரின் பொறுப்பு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்