Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிடோக்கில் இரு கார்கள் விபத்து

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் பிடோக் (Bedok) வட்டாரத்தில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாயின.

அதில் 49 வயது கார் ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டது. அவர் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட படங்களில் அந்த விபத்து ஒரு பள்ளிக்கு முன்னால் நடந்ததைக் காண முடிகிறது.

வெள்ளைக் காரொன்று சாலையின் நடுவில் இரு வழிகளையும் பிரிக்கும் பகுதியின் மீது மோதியது.

கருப்புக் காரொன்று பாதுகாப்புத் தடுப்பின் மீது மோதியது.

அதன் பின் மற்ற கார்களால் சாலையைக் கடந்து செல்ல முடியவில்லை.

சம்பவம் குறித்து நேற்று (10 ஜனவரி) காலை 11.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

70 வயது கார் ஓட்டுநர் விசாரணையில் உதவுகிறார்.
ஆதாரம் : 8 Days/8World

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்