Skip to main content
காசநோய்ப் பரவல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காசநோய்ப் பரவல் - பிடோக் உணவங்காடியில் முன்கூட்டியே துப்புரவுப் பணி

வாசிப்புநேரம் -

பிடோக் புளோக் 216இல் அமைந்துள்ள உணவங்காடி நிலையத்தில் துப்புரவுப் பணிகள் நடைபெறுகின்றன. 

உணவங்காடி நிலையம் நாளை மறுநாள் மீண்டும் திறக்கப்படும்.

அண்மையில் 3,000க்கும் அதிகமானோருக்குக் காசநோய்ப் பரிசோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.   

ரத்தப் பரிசோதனையில் சுமார் 400 பேருக்குப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 

உணவங்காடி நிலையத்தில் வழக்கமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகள் இம்முறை ஒரு மாதம் முன்னதாகவே நடைபெறுகின்றன.   

உணவங்காடி நிலையத்தில் உண்பது பாதுகாப்பானது என்பதைப் பொதுமக்களுக்கு வலியுறுத்துவதற்காக அந்த நடவடிக்கை முன்கூட்டியே நடத்தப்படுவதாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வின் தோங் சொன்னார்.  

ஒருவருடன் சாதாரணமாகப் பழகுவதால் காசநோய் பரவாது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். 

தொற்றுநோய் அமைப்பின் ஊடுகதிர் (x-ray) பரிசோதனை விவரங்கள் இந்த வாரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்