சூடான வானிலையில் எதை அணிவது? கறுப்பா, வெள்ளையா?

CNA/Hanidah Amin
வியர்வை கொட்டுகிறதா?
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மே,-ஜூன் மாதங்கள் ஆக வெப்பமானவை.
வெயிலைச் சமாளிக்க ஒருவர் அணியும் ஆடைகள் பெருமளவில் உதவலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

லேசான ஆடைகள்
-ரசாயனம், சாயம் கலக்கப்படாத பருத்தி
- கைத்தறித் துணி
- Nylon துணி
- polyester
போன்றவற்றை அணிவது ஓரளவு உதவும் என்று அமெரிக்காவின் Southeastern Louisiana பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவைச் சேர்ந்த ரேட் அலேன் (Rhett Allain) BBC ஊடகத்திடம் சொன்னார்.
பருத்தி,கைத்தறித் துணியில் பெரிய இடைவெளிகள் இருப்பதால் உடலில் உள்ள வியர்வை உறிஞ்சிவிடும். ஆனால் வியர்வை மெதுவாகவே துணிகளில் காயும்.
உடற்பயிற்சி ஆடைகளில் பயன்படுத்தப்படும் Nylon,polyester வியர்வை விரைவில் காய்ந்துவிடுவதற்கு உதவும். ஆனால் துர்நாற்றம் நீண்டநேரம் இருக்கலாம்.

உடல்வாகைவிடப் பெரிய ஆடைகள்
அத்தகைய ஆடைகளை அணியும்போது உடலுக்கும் ஆடைக்கும் இடைவெளி உருவாகும்.
அது வியர்வை காய்ந்துவிடுவதற்கு வழியமைக்கும் என்றும் அமெரிக்காவின் வானிலைச் சேவைப் பிரிவைச் சேர்ந்த கிம்பர்லி மெக்மேஹன் (Kimberly McMahon) Times சஞ்சிகையிடம் சொன்னார்.

வெள்ளையா, கறுப்பா?
கறுப்பு நிறம் பொதுவாக வெப்பத்தை உறிஞ்சிவிடும்... அதாவது உடல் வெப்பத்தையும்...சூரியக் கதிர்களையும்...
உடலில் வெப்பம் குறைந்துவிடும்...ஆனால் ஆடைகளில் வெப்பம் நிலைத்திருக்கும்.
வெள்ளை நிறம் வெப்பத்தை உறிஞ்சிவிடாது....
அது உடலின் வெப்பத்தைத் தணிக்க உதவாது ஆனால் ஆடையில் வெப்பம் கூடுவதைத் தடுத்துவிடும்.
இந்நிலையில் எது சிறந்தது?
கறுப்பை அணிந்தால் உடல்வாகைவிடப் பெரிய ஆடைகளை அணிவது சிறப்பு...அப்படி உடல்வாகிற்கு ஏற்ற ஆடைகளை அணிந்தால் வெள்ளை நிறமே சிறந்தது என்று BBC ஊடகம் குறிப்பிட்டது.