Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வடகொரியாவிற்கு Pokka பானங்களைச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக நிறுவனம் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

ஐக்கிய நாட்டுத் தடைகளை மீறி, வடகொரியாவிற்கு Pokka பானங்களைச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக 123 Duty Free Pte Ltd நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் மொத்தம் 5 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறது.

அது 340,000 வெள்ளி மதிப்பிலான Pokka பானங்களை ஏற்றுமதி செய்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

2018ஆம் ஆண்டு அவை ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

Pokka நிறுவனத்திற்கு அதைப் பற்றித் தெரியுமா என்பது தெரியவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 100,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது சம்பந்தப்பட்ட பொருள்களின் மதிப்பைப் போன்று மும்மடங்கு அபராதம், இவற்றில் எது அதிகமோ அது விதிக்கப்படலாம்.

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐக்கிய நாட்டு நிறுவனம் வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தின் தொடர்பில் அதன் மீதான தடைகளைக் கடுமையாக்கி வந்துள்ளது.

அதனால் சிங்கப்பூர் வடகொரியாவுடனான வர்த்தகத்தைத் தற்காலிகமாக நிறுத்தவேண்டியிருந்தது.

இன்று மதுபானம் விநியோகம் செய்யும் நிறுவனமான 123 Holdings Pte Ltd மீதும் அத்தகைய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அது சுமார் 720,000 வெள்ளி மதிப்பிலான மதுபானங்களைச் சீனா மூலம் வடகொரியாவுக்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது.

அவை 2016ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரு நிறுவனங்களின் வழக்குகளும் அடுத்த மாதம் (ஜூன் 2022) 27ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

-CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்