Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிங்கப்பூரில் போகி... எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?

வாசிப்புநேரம் -

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பலரும் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் போகி. 

இன்று போகி.

பொதுவாக போகி தினத்தன்று காலையில், மக்கள் வீடுகளுக்கு வெளியே தீமூட்டி,  பயன்படுத்த முடியாத மரத்தால் ஆன பழைய வீட்டுப் பொருள்களைத் தீயிட்டு எரிப்பர். 

பழையன முடிந்தன...புதியனவற்றுக்கு வழிவகுப்போம் என்பதைக் குறிக்கவே அவ்வாறு செய்யப்படுகிறது. 

சிங்கப்பூரில் எப்படி? வீட்டுக்கு வெளியே தீ மூட்ட முடியாது... போகி தினத்தன்று மக்கள் செய்வது?

'செய்தி' சிலரிடம் பேசியது...

"போகி தினத்தன்று நான் வீட்டைச் சுத்தப்படுத்துவேன். பழைய பொருள்களைக் குப்பைத்தொட்டியில் வீசுவேன்"

--பரிமளம்

" பழைய பொருள்களில் எதை இன்னும் பயன்படுத்தமுடியுமோ, அதைப் பிறருக்கு நன்கொடையாக வழங்குவேன். மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை புளோக் அருகிலுள்ள மறுசுழற்சித் தொட்டிக்குள் வைத்துவிடுவேன்" 

-சுஜாதா சரவணன்

"என்னிடம் இரும்புத் தொட்டி ஒன்று இருக்கிறது. வீட்டு வாசலில் அதைப் பொருத்தி மரத்தால் ஆன தேவையற்ற சிறிய பொருள்களை எரித்துவிடுவேன்."

-மாணிக்கம்

"வீட்டைச் சுத்தப்படுத்துவேன்... மிகவும் சேதமான, பயன்படுத்தப்படமுடியாத பொருள்கள் இருந்தால் மட்டுமே வீசுவேன்"

-ஸ்ரீலதா

பொங்கலுக்கு முன் வரும் போகி தினத்தன்று காலங்காலமாய்ப் பின்பற்றப்படும் வழக்கத்தை அப்படியே பின்பற்ற முடியாவிட்டாலும்  சிங்கப்பூரில் சிலர் போகி தினத்தை அவர்களால் இயன்ற வழிகளில் அனுசரிக்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்