Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிடாடாரி வட்டாரத்தில் துர்நாற்றம் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

வாசிப்புநேரம் -
பிடாடாரி குடியிருப்பாளர்கள் மேற்கொண்ட புதுப்பிப்புப் பணிகளின்போது வீசப்பட்ட குப்பைகள் சரியாக அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் ஏற்பட்டதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மன்ட் லீ (Desmond Lee) தெரிவித்துள்ளார்.

அது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

பிடாடாரி வட்டாரத்தில் தானியக்க முறையில் குப்பைகளைச் சேகரிக்கும் முறை (Pneumatic Waste Conveyance System, PWCS) நடப்பில் உள்ளது.

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பலர் பிடாடாரி வட்டாரத்தில் குடிபுகுந்தனர்.

முறையாகக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாததால் அமைப்பில் அடைப்பு ஏற்பட்டதாகவும் அவை கையால் அகற்றப்பட நிலை ஏற்பட்டதாகவும் திரு. லீ கூறினார்.

அதனால் துர்நாற்றம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

அது போன்ற சூழல் மீண்டும் எழமால் இருக்க, PWCS அமைப்பின் முறையான பயன்பாடு குறித்து மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

- குப்பை சேகரிப்பு நிலையம் அடிக்கடி கழுவப்படுவது
- வெளிப்போக்கு அமைப்பின் (exhaust system) வடிகட்டியை அடிக்கடி மாற்றுவது

ஆகிய நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகத் திரு. லீ நாடாளுமன்றத்துக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்