Skip to main content
இணையத்தில் வாங்கும் மின் சாதனம் தரமானதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இணையத்தில் வாங்கும் மின் சாதனம் தரமானதா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இணையத்தில் வாங்கப்படும் மின்சாரச் சாதனங்கள் சிங்கப்பூரின் விதிமுறைகளுக்கு உட்பட்டிருப்பதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவற்றுக்கு அது பொருந்தும்.

வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வோர் அவற்றைத் தேசியச் சுற்றுப்புற அமைப்புடன் பதிந்துகொள்ள வேண்டும்.

வீட்டில் 6 விழுக்காட்டிற்குக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் விளக்குகளுக்குப் புதிய விதிமுறைகள் பொருந்த மாட்டா.

ஆனால் எதிர்காலத்தில் அது மாறக்கூடும்.

மின்சாரச் சாதனங்கள் சிங்கப்பூரின் எரிசக்திப் பயன்பாட்டுத் தரத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்வது நோக்கம்.

அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றுவது சிரமமாக இருக்கக்கூடும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

நடைமுறைகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி உறுதியளித்தார்.

முன்பு சொந்தப் பயன்பாட்டுக்காக மின்சாதனங்களை இறக்குமதி செய்வோர் அவற்றைப் பதிந்துகொள்ள 70 வெள்ளிக் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது.

இனி அவர்கள் அந்தக் கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை.

ஆனால் விநியோகிப்பாளர்கள் அந்தக் கட்டணத்தைத் தொடர்ந்து கட்டவேண்டும்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்