Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தந்தையருக்குப் பேறுகால விடுப்பு இரட்டிப்பாகும்

வாசிப்புநேரம் -
அரசாங்கச் செலவில் தந்தையருக்கான பேறுகால விடுப்பு 4 வாரங்களுக்கு அதிகரிக்கப்படும்.

அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1ஆம் தேதி முதல் பிறக்கும் சிங்கப்பூர்க் குழந்தைகளின் தந்தையருக்கு அது பொருந்தும்.

அதற்கான மசோதா இன்று (19 செப்டம்பர்) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தற்போது 2 வாரப் பேறுகால விடுப்பு தந்தையருக்கு வழங்கப்படுகிறது.

வேலைச் சூழலின் காரணமாக அதற்குத் தகுதிபெறாத தந்தையர்களுக்கு விடுப்புக்குப் பதிலாகப் பணத்தொகை வழங்கப்படும்.

சொந்தத் தொழில்செய்யும் தந்தையர் பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக வேலை செய்வதை நிறுத்தும் பட்சத்தில் அந்தத் திட்டத்தின் மூலம் பலன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்