Skip to main content
பிரிமியர் லீக் ஆட்டங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிரிமியர் லீக் ஆட்டங்கள் - சட்டவிரோதமாகக் காட்டும் தளங்களுக்குத் தடை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் பிரிமியர் லீக் (premier league) ஆட்டங்களைச் சட்டவிரோதமாகக் காட்டும் 47 தளங்களுக்குத் தடை விதிக்கும்படி இணையச் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 800 சட்டவிரோதத் தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஆசிய பசிபிக்கில் பிரிமியர் லீக் ஆட்டங்களைக் காட்டும் 30,000க்கும் அதிகமான இணையப்பக்கங்கள், செயலிகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான தளங்களைக் காட்டிலும் சட்டவிரோதத் தளங்களில் குறைந்தது ஓர் இணைய மிரட்டல் இருப்பதாக இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சட்டவிரோதத் தளங்களில் கிட்டத்தட்ட 71 விழுக்காட்டு விளம்பரங்கள் ஆபத்தான உள்ளடக்கங்களைக்
காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்