ஒவ்வொரு வீட்டிற்கும் Bloobox மறுபயனீட்டுப் பெட்டி - வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பெறலாம்
வாசிப்புநேரம் -

(படம்: NEA)
வீடுகளில் மறுபயனீட்டை ஊக்குவிக்க, ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக Bloobox மறுபயனீட்டுப் பெட்டி கொடுக்கப்படுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (19 மார்ச்) முதல் அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை தீவெங்கிலும் உள்ள Bloobox தானியக்க இயந்திரங்களில் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வோர் இல்லத்திலும், மறுபயனீட்டு மூலையை அமைத்துக்கொள்ள, தேசியச் சுற்றுப்புற அமைப்பு ஊக்குவிக்கிறது.
முறையான மறுபயனீட்டை ஊக்குவிக்க தேசிய அளவில் தொடங்கப்பட்டுள்ள இயக்கத்தின் ஒரு பகுதியாக Bloobox மறுபயனீட்டுப் பெட்டிகள் கொடுக்கப்படுகின்றன.
அதன் வழி, குடியிருப்புப் பேட்டைகளில், நீல நிறத்தில் உள்ள மறுபயனீட்டுப் பெட்டிகளில் தூய்மைக்கேட்டைக் குறைக்க முடியும் என்று அமைப்பு நம்புகிறது.
மறுபயனீட்டின் பலன்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் அமைப்பு முற்படுகிறது.