Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ரத்த வங்கியில் ரத்த இருப்புகள் மிதமான நிலைக்கு மேம்பட்டிருக்கின்றன

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ரத்த வங்கியில், ரத்த இருப்புகள் மிதமான நிலைக்கு மேம்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த தானம் செய்ய விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதற்கு முன்வந்தனர்.

சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் அந்தத் தகவலை வெளியிட்டன.

கடந்த மாத முற்பாதியில் சிங்கப்பூரில் A+, O+ ரக ரத்த இருப்புகள் குறைவான அளவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ரத்த தான வேண்டுகோள் விடுக்கப்பட்டதை அடுத்து, ஒரு வாரத்திற்குள் ரத்த இருப்புகள் 45 விழுக்காடு அதிகரித்தன. 

முன்வந்த 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 21 விழுக்காட்டினர் முதன்முறையாக ரத்த தானம் செய்தவர்கள்.
15 விழுக்காட்டினர் இளையர்கள்.

தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நாள் ஒன்றுக்கு, சிங்கப்பூர் ரத்த வங்கி சுமார் 400 தொகுதி ரத்தத்தைச் சேகரிக்க வேண்டியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்