Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உங்களிடம் COVID-19க்கு எதிரான தடுப்பாற்றல் உள்ளதா?10 நிமிடத்தில் அறியலாம்

வாசிப்புநேரம் -
உங்களிடம் COVID-19க்கு எதிரான தடுப்பாற்றல் உள்ளதா?10 நிமிடத்தில் அறியலாம்

(படம்: NTU)

COVID-19க்கு எதிரான தடுப்பாற்றல் இருக்கிறதா என்பதை 10 நிமிடத்தில் அறிந்துகொள்ளக்கூடிய புதிய பரிசோதனைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SMART எனும் Massachusetts Institute of Technology பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் ஆய்வுக் கூடம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருவியை உருவாக்கியுள்ளனர்.

பரிசோதனை மேற்கொள்வதற்கு ஒரு துளி ரத்தம் இருந்தால் போதும்.

முடிவுகளுக்கு வழக்கம்போல  ஒன்றிலிருந்து மூன்று நாள்கள் வரை காத்திருக்கத் தேவையில்லை.

10 நிமிடங்களுக்குள் முடிவுகளை அறியமுடியும். அவை 93 விழுக்காடு வரை துல்லியமாக இருக்கும். 

பரிசோதனைக் கருவியை யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம் என்றும் அதற்கென்று பயிற்சி பெற அவசியமில்லை என்றும் கூறப்பட்டது.

மற்ற கிருமி வகைகளுக்கான தடுப்பாற்றலைச் சோதிக்கும் வகையில் கருவியை எளிதாக மாற்றி அமைப்பதும் சாத்தியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம் : CNA/hw(mi)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa