Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அமைச்சர் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் வேண்டும்: Bloomberg வழக்கறிஞர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Bloomberg செய்தி நிறுவனத்தின்மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்துத் தற்காப்பு வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தைக் காட்டுமாறு திரு ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் (Tan See Leng) தொடுத்த அந்த வழக்கின் விசாரணை மூன்றாம் நாளாக நடைபெற்றது.

அதில் திரு சண்முகம் மீண்டும் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கட்டுரையில் பொய்த் தகவல்கள் நேரடியாக இடம்பெற்றனவா என்பது விசாரணையில் முக்கிய இடம் பிடித்தது.

கட்டுரையை முழுமையாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திரு சண்முகம் சொன்னார்.

மேலும் தாம் சட்டத்துக்குப் புறம்பாகவும் கள்ளப் பணமாற்றத்துக்குத் துணைபோனதாகவும் உணர்த்தும் வகையில் கட்டுரை எழுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உயர் மதிப்புச் சொத்துப் பரிவர்த்தனை பற்றிய Bloomberg கட்டுரை சஞ்சலத்தை ஏற்படுத்தியதாக டாக்டர் டான் கூறினார்.

விசாரணை நாளை தொடரும்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்