மெக்ரிட்ச்சியில் அரிய வகைப் பாம்பு - நெருங்காதீர்!
வாசிப்புநேரம் -
படங்கள்: Facebook/Singapore Wildlife Sightings
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மெக்ரிட்ச்சி நீர்த்தேக்கத்தில் (MacRitchie Reservoir) அரிய வகைப் பாம்பு காணப்பட்டுள்ளது.
அது கீல்பேக் (keelback) ரகப் பாம்பு.
அதன் கழுத்துப் பகுதி மட்டும் நீல நிறத்தில் இருந்தது.
இணையவாசி ஒருவர் பாம்பைப் படம் எடுத்துப் பதிவிட்டார்.
அப்போது பாம்பு ஒரு தவளையைத் தின்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அந்தப் பாம்பு கொடிய நச்சுத்தன்மை வாய்ந்தது என்று இணையவாசிகள் கூறினர்.
சிங்கப்பூரில் உள்ள காடுகளில் கீல்பேக் ரகப் பாம்பைக் காண்பது இயல்பானது.
தேசியப் பூங்காக் கழகத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் அதனை 8 World செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.
பாம்பை நெருங்கக்கூடாது; தொந்தரவு செய்யக்கூடாது என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பயத்தில் தன்னைத் தற்காத்துக்கொள்ள பாம்பு சீறக்கூடும் என்று சொல்லப்பட்டது.
செல்லப்பிராணிகள் பாம்பைச் சீண்டாமல் இருக்கும்படி உரிமையாளர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும்.

ஆதாரம் : Others/8 World