பூன் லேயில் பெரிய வாகனம் மோதி 72 வயது முதியவர் மரணம்
வாசிப்புநேரம் -
பூன் லேயில் கனரக வாகனம் மோதிய விபத்தில் 72 வயது பாதசாரி மாண்டார்.
சம்பவத்தைக் காட்டும் காணொளி TikTok-இல் பகிரப்பட்டது.
அதில் சாலையின் நடுவில் கனரக வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
சம்பவம் பூன் லே கடைத்தொகுதிக்கு அருகே நடந்ததாகக் காணொளியில் தெரிகிறது.
குறைந்தது 3 காவல்துறை வாகனங்கள், 2 காவல்துறை மோட்டார்சைக்கிள்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
சாலையில் தடுப்புகளும் போடப்பட்டிருந்தன.
ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதும் காணொளியில் தெரிந்தது.
சம்பவம் குறித்து 8 World காவல்துறையிடம் கேட்டது.
நேற்று காலை சுமார் 7.20 மணிக்குப் புகார் கிடைத்ததாகக் காவல்துறை சொன்னது.
புளோக் 190 பூன் லே டிரைவ் (Boon Lay Drive) அருகே விபத்து நேர்ந்ததாக அது கூறியது.
மாண்ட பாதசாரி சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பிறகு மருத்துவமனையில் அவர் மாண்டார்.
கனரக வாகனத்தின் ஓட்டுநர் கவனமின்றி வாகனம் ஓட்டியதற்காகக் கைதுசெய்யப்பட்டார்.
அவருக்கு வயது 48.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Others/8 World