Skip to main content
சேவலுடன் காற்பந்து விளையாடிய சிறுவன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சேவலுடன் காற்பந்து விளையாடிய சிறுவன்

வாசிப்புநேரம் -
சேவலுடன் காற்பந்து விளையாடிய சிறுவன்
படம்: TikTok/ [at] aisyah.jalil
வெளியீடு : 10 Jan 2026 03:59PM புதுப்பிப்பு : 10 Jan 2026 04:12PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் குடியிருப்புப் பேட்டையில் உலவிய சேவலுடன் சிறுவன் காற்பந்து விளையாடியிருக்கிறான்.

இணையவாசி ஒருவர் அதைக் காணொளி எடுத்து Tik Tok பக்கத்தில் பதிவிட்டார்.

அவர் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை 'tag' செய்து சேவல் புதிதாக இணைந்த காற்பந்து வீரரா என்று வேடிக்கையாகப் பதிவிட்டார்.

காணொளியில் சிறுவன் சேவலை நோக்கிப் பந்தை வீசுவது தெரிகிறது.

சேவலும் பந்தை நிறுத்தி அதை லாவகமாக நகர்த்திச் செல்கிறது.

காணொளியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

பலரும் அவர்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.

சிறுவன் திறம்படக் காற்பந்து விளையாட்டைக் கற்றுத் தருவதாக ஒருவர் குறிப்பிட்டார்.

மற்றொருவர் சிறுவனின் பெற்றோரைப் பாராட்டினார்.

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது என்று சிறுவன் உணர்ந்ததை நினைத்து அந்த இணையவாசி நெகிழ்ந்தார்.

சிலர் அவர்களது வட்டாரத்தில் சுற்றித் திரியும் சேவல்களைப் படம்பிடித்துப் பகிர்ந்தனர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்