Boys' Town அமைப்பின் 75ஆம் ஆண்டு நிறைவு - "தேவையுள்ள பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் ஆதரவளிப்பது கூட்டுப் பொறுப்பு" - அதிபர் ஹலிமா
(படம்: Screenshot/CNA)
சிங்கப்பூரில் தேவையுள்ள பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் ஆதரவளிப்பது கூட்டுப் பொறுப்பு என்று அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) கூறியுள்ளார்.
அக்கறைமிகுந்த சமுதாயமாகத் திகழ அத்தகைய நடவடிக்கை முக்கியம் என்றார் அவர்.
இந்தத் தலைமுறையினர் மட்டுமல்லர், வருங்காலத் தலைமுறையினரும் பயன்பெறும் வகையில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று திருவாட்டி ஹலிமா கேட்டுக்கொண்டார்.
Boys' Town அமைப்பின் 75ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
அந்த அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகள் பயனடைவதை அதிபர் சுட்டினார்.
ஒவ்வொரு பிள்ளையும் குடும்பத்துடனும் சமுதாயத்துடனும் நல்ல உறவைக் கொண்டிருப்பதற்கு Boys' Town அமைப்பு உதவுகிறது என்றும் அவர் கூறினார்.