மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய AI?
வாசிப்புநேரம் -
படம்: CNA
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே கண்டறிய அந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மார்பகத்தில் புற்றுநோயை உண்டாக்கும் சிறிய கட்டிகள் சோதனைகளில் வெள்ளைப் புள்ளிகளாகத் தோற்றமளிக்கும். இதனால் அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம்.
ஆனால் செயற்கை நுண்ணறிவை வைத்து சோதனை நடத்தினால் அந்தக் கட்டிகளைத் தெளிவாகக் கண்டறிய முடிவதாகக் கூறப்படுகிறது.
இதனால் விரைவாகச் சிகிச்சை அளிக்கமுடியும்.
இந்தப் புதிய தொழில்நுட்பம் கிட்டத்தட்ட 95 விழுக்காடு துல்லியமானது, புற்றுநோய் பரவுவதையும் தடுக்கமுடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது சிங்கப்பூரில் மார்பகப் புற்றுநோயாளிகள் 10 பேரில் ஒருவருக்கு நான்காம் கட்டத்தில்தான் நோய் கண்டறியப்படுகிறது.

ஆதாரம் : CNA