Skip to main content
மார்பகப் புற்றுநோய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மார்பகப் புற்றுநோய் - அறிகுறிகள், அபாயங்கள்..கண்டறிவது எப்படி?

வாசிப்புநேரம் -
மார்பகப் புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

சிங்கப்பூரில் 10இல் கிட்டத்தட்ட ஒருவர் இறுதிக்கட்டத்தின்போதுதான் தமக்குப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிகிறார். வளர்ச்சியடைந்த மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை அதிகம்.

மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் அறிகுறிகள் என்னென்ன? எதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்?

1. மார்பகப் புற்றுநோய் எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

எல்லா வயதினருக்கும் மார்பகப் புற்றுநோய் எற்படக்கூடும். குறிப்பிட்ட வயதில்தான் வரும் என்று நினைக்கக்கூடாது.

2. பரிசோதனைக்குச் செல்வது முக்கியம்

அடிக்கடி மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வது முக்கியம் என CNAயிடம் பேசிய மருத்துவர் ஆலோசனை கூறியிருக்கிறார். மார்பகத்தில் மாற்றங்கள் ஏதேனும் இருப்பதைக் கவனித்தால் உடனடியாக மருத்துவரை அணுகும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

3. வலி இல்லை...ஆனால் கட்டி இருக்கிறது...

மார்பகத்தில் இருக்கும் கட்டியினால் வலி ஏதுமில்லை எனும் பட்சத்தில் புற்றுநோய் இல்லை என நினைத்துவிடக்கூடாது.

வலி இல்லாத கட்டி ஆபத்தாக அமையலாம். அதனைப் புறக்கணிக்கக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.

4. mammogram பரிசோதனையை ஒருமுறை செய்தால் போதாது

mammogram பரிசோதனையை ஒருமுறை செய்தால் போதும்.... மார்பகப் புற்றுநோய் இனி வராது எனும் தவறான கண்ணோட்டம் பல பெண்களுக்கு உள்ளது. ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என CNAயிடம் பேசிய மருத்துவர் கூறினார்.

5. mammogramஐ திரும்பத் திரும்ப செய்வது பாதுகாப்பானாதா?

mammogram பரிசோதனையைத் திரும்பத் திரும்ப செய்யும்போது கதிரியக்க வெளிப்பாடு (radiation) ஏற்படும் என்று சிலர் கவலைப்படுகின்றனர். ஆனால் அது மிகக் குறைவு என்று நிபுணர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்