Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அப்பர் புக்கிட் திமா ரோட்டில் வனவிலங்குகள்,பாதசாரிகளுக்கான பாலம் 2026க்குள் கட்டப்படும்

வாசிப்புநேரம் -
அப்பர் புக்கிட் திமா ரோட்டில் வனவிலங்குகள்,பாதசாரிகளுக்கான பாலம் 2026க்குள் கட்டப்படும்

(படம்: NParks)

புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவையும் புக்கிட் தீமா இயற்கைப் பாதுகாப்புப் பகுதியையும் இணைக்கும் புதிய பசுமைப் பாலம் 2026ஆம் ஆண்டிற்குள் கட்டப்படும்.

வனவிலங்குகள் வாகன விபத்துகளில் சிக்குவதைத் தவிர்க்கவும் தீவின் வனப்பகுதிகளை அவை பாதுகாப்பாகக் கடக்கவும் பாலம் உதவும்.

தேசியப் பூங்காக் கழகம் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

மரங்களில் வாழும் விலங்குகளுக்குப் பாதுகாப்பான பாதையை உருவாக்கவே புதிய பசுமைப் பாலம் கட்டப்படுகிறது.

மூவாண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்படும்.

அதை மனிதர்களும் பயன்படுத்தலாம்.

வனவிலங்குகள் அதிகமாக சாலை விபத்துகளில் சிக்கும் 6 இடங்களில் ஒன்றில் பாலம் அமைக்கப்படும்.

புக்கிட் தீமா விரைவுச் சாலையில் உள்ளது 2013ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த Eco-Link பாலம்.

பத்தாண்டுகளாக விலங்குகள் சாலையைப் பாதுகாப்பாகக் கடக்க அது உதவியுள்ளது.

இதுவரை சுமார் 100 விலங்கினங்கள் பாலத்தைப் பயன்படுத்தியுள்ளன.

உள்ளூர் விலங்குகள் காடுகளில் பத்திரமாக வாழ்வதற்கு இத்தகைய நடைபாதைகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன.
ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்