Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் RSS Singapura - சாங்கிக் கடற்படைத் தளத்தைப் பார்வையிட்டார் புருணை பட்டத்து இளவரசர்

வாசிப்புநேரம் -

புருணையின் பட்டத்து இளவரசர் அல்-முஹ்ட்டாடி பில்லா (Al-Muhtadee Billah) சிங்கப்பூரின் RSS Singapura - சாங்கி கடற்படைத் தளத்தைப் பார்வையிட்டுள்ளார். 

1976ஆம் ஆண்டிலிருந்து வலுப்பெற்றுவரும் இரு நாடுகளின்  தற்காப்பு உறவுகளை அது எடுத்துக்காட்டுவதாகச் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

8ஆவது ஆண்டாக நடைபெறும் சிங்கப்பூர்-புருணை இளம் தலைவர்கள் திட்டத்தின் ஓர் அங்கமாகப் பட்டத்து இளவரசர் அல்-முஹ்ட்டாடி பில்லா இங்கு வந்திருக்கிறார்.

சிங்கப்பூர், புருணையைச் சேர்ந்த இளம் தலைவர்களுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்த அந்தப் பரிமாற்றுத் திட்டம் வகை செய்கிறது.

பட்டத்து இளவரசர் அல்-முஹ்ட்டாடி, சிங்கப்பூர்க் கடற்படையின் RSS Sovereignty கப்பலில் பயணம் மேற்கொண்டார்.

Littoral Mission கப்பல்களின் செயல்பாடு, ஆற்றல்கள் ஆகியவை பற்றி அவருக்கு விவரிக்கப்பட்டது.

கடல்துறைப் பாதுகாப்பை நிர்வகிக்க, சிங்கப்பூர் கடற்படை எப்படி, சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் போன்ற ஏனைய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றது எனபதும் அவருக்குக் காட்டப்பட்டது.

இன்றைய சந்திப்பில் புருணையின் பட்டத்து இளவரசருடன் சிங்கப்பூரின் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது கலந்துகொண்டார்.

புருணையுடன் இன்னும் இணக்கமாய்ப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்