Skip to main content
BTS கச்சேரி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

BTS கச்சேரி- முன்பதிவு தொடக்கம்

வாசிப்புநேரம் -
BTS கச்சேரி- முன்பதிவு தொடக்கம்

Handout / BIGHIT MUSIC and NETFLIX / AFP

சிங்கப்பூரில் BTS குழு நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளின் முதற்கட்ட விற்பனை இன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கியது.

BTS குழு ரசிகர்களின் அதிகாரபூர்வ இணையத்தளமான Weverse-இல் முன்பதிவுகள் நடைபெற்றன.

வாரநாளில் விற்பனை நடத்தப்படுவதால் வேலை, பாடம் ஆகியவற்றுக்கு இடையில் நுழைவுச்சீட்டை வாங்க வேண்டியிருந்ததாக ரசிகர்கள் கூறினர்.

VIP எனும் அதிக விலையுர்ந்த பிரிவுகளில் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் நுழைவுச்சீட்டுகளைப் பெற முடிந்ததாகச் சிலர் தெரிவித்தனர்.

BTS கச்சேரிக்கான நுழைவுச்சீட்டுகள் $148 வெள்ளியில் தொடங்குகின்றன.

VIP பிரிவுக்கான நுழைவுச்சீட்டுகள் $388 வெள்ளியிலிருந்து தொடங்குகின்றன.

அதிகாரபூர்வ தளங்களின் மூலமாகவே நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சிங்கப்பூர்க் காவல்துறையும், சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கமும் வலியுறுத்தின.

சிங்கப்பூரில் BTS குழுவினர் நடத்தும் முதல் இசை நிகழ்ச்சி இது.

BTS குழு K-pop எனும் கொரிய இசை உலகின் ஜாம்பவானாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்