BTS நுழைவுச்சீட்டு விற்பனை Carousellஇல் ரத்து
வாசிப்புநேரம் -
படம்: BIGHIT MUSIC / Netflix / AFP
இணைய விற்பனைத் தளமான Carousell, சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் BTS இசை நிகழ்ச்சிகளின் நுழைவுச்சீட்டு மறுவிற்பனையைத் தற்காலிகமாக ரத்து செய்திருக்கிறது.
தளத்தில் ஏற்கனவே உள்ள விளம்பரங்கள் அகற்றப்படுகின்றன.
ஏதேனும் விளம்பரங்களைக் கண்டால் புகார் செய்யும்படி தளம் பயனீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது.
நுழைவுச்சீட்டுகளுக்கான முன்னோட்ட விற்பனை நேற்றுத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நுழைவுச்சீட்டுகள் அவற்றின் விலையைவிட 23 மடங்கு வரை கூடுதலாக Carousell தளத்தில் விற்பனைக்கு வந்தன.
தளத்தில் இன்னும் சில விளம்பரங்களை நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்புக் கருவி கண்டறிந்திருப்பதாக Carousell கூறியது.
புதிதாய் உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் தற்காலிகமாகத் தளத்தில் காணப்படலாம் என்று நிறுவனம் சொன்னது.
இதுவரை மோசடிகள் நடந்ததாகத் தெரியவில்லை என்று Carousell தெரிவித்தது.

ஆதாரம் : CNA