வரவுசெலவுத் திட்டம் 2022... ஒரே பார்வையில்
வாசிப்புநேரம் -
அரசாங்கம், 109 பில்லியன் வெள்ளி வரவுசெலவுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
COVID-19 நிலவரத்திலிருந்து நாடு வலிமையுடன் மீண்டுவர உதவுவது இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி, சிங்கப்பூரின் எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலீடு செய்யப்படும் என்றார் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்.
- 6G கட்டமைப்பு போன்றவை அதில் அடங்கும்.
- குடும்பங்கள் அத்தியாவசியச் செலவினங்களைச் சமாளிக்கவும் ஆதரவு வழங்கப்படும்.
- அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பு எளிமையாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் திட்டங்கள் விவரிக்கப்பட்டன.
- சிங்கப்பூரின் பசுமைத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
- பொருள், சேவை வரி உயர்வு, கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.