பருவநிலையைக் காக்க 1 பில்லியன் டாலர் நிதி
வாசிப்புநேரம் -

(படம்: Pixabay)
நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதிக்கட்டமைப்பை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
அதற்குச் சரியான பங்காளித்துவம் தேவை என்றார் அவர்.
எரிசக்தி உருமாற்றம், நிலக்கரிப் பயன்பாட்டை முற்றிலும் குறைப்பது, எஃகு, சிமெண்ட், ஆகாயப் போக்குவரத்து உள்ளிட்ட அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய துறைகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படலாம்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இவ்வாண்டு முக்கியமான ஆண்டு என்று அவர் கூறினார்.
நிதி, தரநிலை, கொள்கைகள், அறிவாற்றல் ஆகியவை பசுமைப் பொருளாதார உருமாற்றத் திட்டங்களுக்குத் தேவைப்படும் அம்சங்கள் என அவர் சொன்னார்.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க அனைத்துலக ஒத்துழைப்பும், தொழில்நுட்ப முன்னேற்றமும் முக்கியம் என்றார் அவர்.

ஆதாரம் : Others