Skip to main content
புக்கிட் பாத்தோக் காப்பிக் கடையில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக் காப்பிக் கடையில் தீ

வாசிப்புநேரம் -
புக்கிட் பாத்தோக் காப்பிக் கடையில் தீ

படம்: Lee Hong Chuang/Facebook

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் (Bukit Batok West) புளோக் 413ல் உள்ள உணவங்காடியில் தீ மூண்டதில் 30 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

உணவங்காடிக்குள் இருந்த பொருள்கள் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் இருவர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் இங் தெங் ஃபோங் (Ng Teng Fong) பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்றதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹொங் சுவாங் (Lee Hong Chuang) Facebook பதிவில் தெரிவித்தார்.

காப்பிக் கடை உரிமையாளர், மற்ற கடைக்காரர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோரிடம் பேசி நிலைமையைக் கேட்டறிந்து ஆறுதல் சொன்னதாக அவர் கூறினார்.

இரண்டாவது மாடியில் வசிப்போருக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்