Skip to main content
உள்ளூர்க் கலைப்படைப்புகளை அதிகம் காண முன்னோடித் திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உள்ளூர்க் கலைப்படைப்புகளை அதிகம் காண முன்னோடித் திட்டம்

வாசிப்புநேரம் -
உள்ளூர்க் கலைப்படைப்புகளை அதிகம் காண முன்னோடித் திட்டம்

எஸ்எம்ஆர்டி ரயிலின் கோப்புப் படம்(படம்: SMRT Corporation Ltd))

சிங்கப்பூரில் மேம்பாலச் சாலைகள், சுரங்க நடைபாதைகள் ஆகியவற்றில் உள்ளூர்க் கலைஞர்களின் கலைப்படைப்புகளை இனி அதிகமாகப் பார்க்கலாம்.

புக்கிட் கோம்பாக்கில் அதற்கான முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வட்டாரத்தின் வரலாற்றையும் கலாசாரத்தையும் எடுத்துக்காட்டும் கலைப்படைப்புகளை அங்கு காணலாம்.
MRT ரயில் தடத்துக்குக்கீழ் இருக்கும் தூண்கள்.

அவற்றில் கண்கவர் கலைப்படைப்புகள்.

மலாய் மொழியில் 'கோம்பாக்' என்றால் தொகுப்பு.

அதன் அர்த்தத்தை இவை காட்டுகின்றன.

அங்குள்ள குடியிருப்பாளர்களின் நினைவுகளைச் சித்திரிக்கின்றன.

QR குறியீட்டை வருடிக் கலைப்படைப்புகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

சிங்கப்பூர் கலை வாரத்தின் ஒரு பகுதியாக புக்கிட் கோம்பாக்கில் கலைத் திட்டம் அறிமுகமானது.

மனத்துக்கு நெருக்கமான நினைவுகளோடு குடியிருப்பாளர்களை இணைக்க இந்த முன்னோடித் திட்டம் உதவுகிறது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்