சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
ஏராளமாக மற்ற இனத்தவர் கலந்துக்கொண்ட பொங்கல் திருவிழா..புக்கிட் பாஞ்சாங்கில் கோலாகலக் கொண்டாட்டம்...
வாசிப்புநேரம் -

படம்: இம்ரான்
புக்கிட் பாஞ்சாங்கில் இந்த ஆண்டுப் பொங்கல் கொண்டாட்டம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அதில் மண்மணம் கமழும் பல இந்தியப் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பொய்க்கால் குதிரை, கரகாட்டம், தமிழர் பாரம்பரிய நடனங்கள், பொங்கல் வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளுக்கு இடையில் ரத்ததான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புக்கிட் பாஞ்சாங் பொங்கல் நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவருடன் ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா (Edward Chia), புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா (Liang Eng Hwa) முதலியோரும் பங்கேற்றனர்.
பொங்கல் கொண்டாட்டத்திற்கு மேலும் மெருகூட்ட சிங்கப்பூரின் பிரபல மணிமாறன் நடனக்குழுவினருடன் நாட்டுப்புற இசையில் தடம் பதித்துவரும் தமிழகக் கலைஞர்கள் முனைவர் செந்தில், ராஜலட்சுமி தம்பதியும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு இனத்தவரும் பங்கேற்றனர். அவர்களில் சில பெண்கள் இந்தியக் கலாசார உடையணிந்து, கிராமியப் பாடலுக்கு கும்மியடித்துப் பொங்கல் கொண்டாட்டத்தை மேலும் குதூகலப்படுத்தினர்.
இதோ அந்தக் காணொளி உங்களுக்காக....

ஆதாரம் : Mediacorp Seithi