Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் தீமாவில் இரு கார்கள் மோதல்... மூவர் மருத்துவமனையில்...

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் புக்கிட் தீமா பகுதியில் நேர்ந்த கார் விபத்தில் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு கார் சாலைச் சந்திப்பின் மறுபுறத்துக்கு உருண்டது.

புக்கிட் தீமா சாலைக்கு அருகில் விபத்து நேர்ந்ததாக SG Road Vigilante Facebook பக்கத்தில் பதிவிடப்பட்டது.

சம்பவத்தைக் காட்டும் காணொளியில் இரு கார்கள் மோதிக்கொள்வதைக் காணலாம். அதில் ஒரு கார் ஜாலான் அனாக் புக்கிட் (Jalan Anak Bukit) வரை உருண்டது.

காரின் சில பகுதிகள் விழுந்துவிட்டதைப் படங்களில் காணலாம்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விபத்து திங்கட்கிழமை (25 நவம்பர்) நேர்ந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை Channel 8 செய்தியிடம் கூறியது.

இருவர் இங் டெங் ஃபொங் (Ng Teng Fong) மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், ஒருவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அது கூறியது.

சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.

ஆதாரம் : Others/8World

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்