Turf Cityஇல் முதல் தனியார் வீடு - ஜூலை 10 பார்வையிடலாம்
வாசிப்புநேரம் -
படம்: இணையம்/thedunearnhouse
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புதிய புக்கிட் தீமா Turf Cityஇல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் தனியார் வீட்டுத் திட்டத்தை வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து மக்கள் பார்வையிடலாம்.
Dunearn House எனும் அந்தத் திட்டத்திற்கான விற்பனை இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கும்.
99 ஆண்டுக் குத்தகையைக் கொண்ட அத்திட்டம் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மாபெரும் உருமாற்றத்தில் ஒரு பகுதி.
முன்னர் அங்கு குதிரைப் பந்தயத் திடல் அமைந்திருந்தது.
380 வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.
அவற்றில் சுமார் பாதி ஈரறை வீடுகள்.
வீடுகளின் விலை ஒன்றரை மில்லியன் வெள்ளிக்குச் சற்றுக் குறைவு.
பெரிய மூவறை வீடுகளின் விலை சுமார் 2.6 மில்லியன் வெள்ளியிலிருந்து தொடங்குகிறது.
நான்கறை வீடுகளின் விலை சுமார் 3.6 மில்லியன் வெள்ளி.
தற்போதுள்ள சிக்ஸ்த் அவென்யூ ரயில் நிலையத்துக்கும் வருங்காலத்தில் அமையவிருக்கும் குறுக்குத் தீவு ரயில் பாதை நிலையத்துக்கும் அருகே Dunearn House அமையும்.
இந்த வட்டாரத்தில் வீடு வாங்க விரும்புவோரை அது ஈர்க்கக்கூடும் என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : Mediacorp Seithi