பேருந்து வருகை நேரத்தில் தவறு - மென்பொருள் நிறுவனத்துக்கு அபராதம்
This audio is generated by an AI tool.
பேருந்து வருகை நேரத்தைத் தவறாகக் காட்டிய மென்பொருளை வழங்கிய நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படவிருப்பதாகப் போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow) கூறியுள்ளார்.
ஜனவரி 10ஆம் தேதி தவறு தெரியவந்தது.
பிப்ரவரி 12ஆம் தேதியில்தான் சரிசெய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஹி டிங் ரூ (He Ting Ru) எழுப்பிய கேள்விக்குத் திரு சியாவ் பதிலளித்தார்.
ஜனவரி 21ஆம் தேதி மென்பொருளில் கோளாறு சரிசெய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
ஆனால் அடுத்த நாள் இன்னும் 4 நாள்கள் தேவைப்படும் என்று ஆணையம் கூறியது.
வாரக் கடைசிக்குள் பழுதுபார்க்கும் பணி முடிந்துவிடும் என்று ஆணையம் ஜனவரி 27ஆம் தேதி கூறியது.
இறுதியில் பிப்ரவரி 12ஆம் தேதிதான் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
மென்பொருளில் கோளாற்றைக் கண்டறிய ஈராண்டுக்கு ஒருமுறை சோதனை நடத்தப்படுவதாகத் திரு சியாவ் கூறினார்.
2024ஆம் ஆண்டில் தெரியவந்த சில சிறிய கோளாறுகள் சரிசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் இவ்வாண்டு நடந்த கோளாற்றுக்கான காரணம் அப்போது நடத்தப்பட்ட சோதனையில் புலப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.