61 வயது கடந்த பேருந்து ஓட்டுநர்கள் கடும் விபத்துகள் ஏற்படுத்த அதிக வாய்ப்பு
வாசிப்புநேரம் -
தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow), 61 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய பேருந்து ஓட்டுநர்கள், மற்ற வயதினரை விட, கடுமையான பேருந்து விபத்துகளை ஏற்படுத்தும் சாத்தியம் அதிகமாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ (Valerie Lee) கேட்ட கேள்விகளுக்கு திரு சியாவ் பதிலளித்தார்.
2023ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 61 முதல் 70 வயது வரையுள்ள பேருந்து ஓட்டுநர்களுக்கு 20 கடும் விபத்துகளில் தொடர்பிருந்தது.
மற்ற வயதினர் (ஆண்டு சராசரி- 2023இலிருந்து) :
🚌 50 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய ஓட்டுநர்கள் : 51 விபத்துகள்
🚌 51 முதல் 60 வயது வரையுள்ள ஓட்டுநர்கள்: 27 விபத்துகள்
🚌 61 முதல் 70 வயது வரையுள்ள ஓட்டுநர்கள்: 20 விபத்துகள்
🚌 71 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஓட்டுநர்கள்: 3 விபத்துகள்
பேருந்தை ஓட்டும் உரிமத்தைப் புதுப்பிக்கும்போது 50 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய பேருந்து ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றார் திரு சியாவ்.
அவர்கள் பேருந்தை ஓட்ட தகுதியானவர்களா என்பதை உறுதிசெய்ய இது உதவுகிறது; பேருந்துப் பாதுகாப்பை மேம்படுத்த முத்தரப்புப் பணிக்குழு பரிந்துரை செய்துள்ள நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.
360 டிகிரி கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது, தொடர்ச்சியாக பேருந்து ஓட்டும் நேரத்தைக் குறைத்துக்கொள்வது ஆகியவை அவற்றில் அடங்கும்.

ஆதாரம் : Mediacorp Seithi