Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ByteDance ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு - விநியோகிக்கப்பட்ட உணவே காரணம்

வாசிப்புநேரம் -

TikTok செயலியை நிர்வகிக்கும் ByteDance ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதற்கு விநியோகிக்கப்பட்ட உணவே காரணம் என்று தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு Facebook தளத்தில் தெரிவித்தது.

இவ்வாண்டு ஜூலை 30ஆம் தேதி 130 பேருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது.

அவர்கள் Yun Hai Yao, Pu Tien Services ஆகிய நிறுவனங்களின் உணவைச் சாப்பிட்டதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூர் உணவு அமைப்பு, பின்னர் Yun Hai Yao, Pu Tien Services ஆகியவற்றின் வர்த்தகத்திற்குத் தற்காலிகத் தடைவிதித்தது.

தயார்செய்யப்பட்ட அனைத்து உணவையும் அப்புறப்படுத்தும்படி அது உத்தரவிட்டது.

நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்த பிறகு அவற்றின் மீதான தடை ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது.

ஆதாரம் : Others/Social media

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்