Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமைச்சரவை மாற்றங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம்: பிரதமர் லீ

வாசிப்புநேரம் -
அமைச்சரவை மாற்றங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம்: பிரதமர் லீ

(கோப்புப்படம்: Reuters)

அமைச்சரவை மாற்றங்கள் அடுத்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

அமெரிக்க-ஆசியான் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு அமெரிக்காவுக்குச் சென்றிருந்த அவர், பயணத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவராக நியமிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் பிரதமர் லீ அவ்வாறு கூறினார். 

"நான் அமெரிக்கப் பயணம் மீது கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இன்னும் 2 வாரங்களில் ஜப்பானுக்கு இன்னொரு பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்,"

"இருப்பினும், அமைச்சரவை மாற்றங்கள் குறித்துப் பரிசீலிக்கிறேன். பயணங்கள் முடிவடைந்த பின் மாற்றம் குறித்து அறிவிக்க இயலும் என்று நம்புகிறேன்," என்று திரு. லீ சொன்னார்.

அடுத்த பொதுத்தேர்தலில் திரு. வோங் மக்கள் செயல் கட்சியை வழிநடத்துவரா என்பது குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று அவர் கடந்த மாதம் கூறியிருந்தார்.

சிறந்த உத்தி குறித்து திரு. வோங்குடன் கலந்துரையாடவுள்ளதாகத் திரு. லீ சொன்னார்.

2025-ஆம் ஆண்டுக்குள் அடுத்த பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa