Skip to main content
நாட்டுக்கு ஆக வலுவான குழுவை அமைத்திருக்கிறோம்: பிரதமர் வோங்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நாட்டுக்கு ஆக வலுவான குழுவை அமைத்திருக்கிறோம்: பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
நாட்டுக்கு ஆக வலுவான குழுவை அமைத்திருக்கிறோம்: பிரதமர் வோங்

படம்: CNA/Marcus Mark Ramos

சிங்கப்பூர் அதன் 15ஆவது நாடாளுமன்றத் தவணைக்கான அமைச்சரவையை அறிவித்துள்ளது.

நாட்டுக்கு ஆக வலிமையான குழுவை அமைத்திருப்பதாய்ப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அனுபவமிக்கவர்களும், புதியவர்களும் அமைச்சர் பொறுப்புகளை ஏற்கவுள்ளதாய்த் திரு வோங் சொன்னார்.

முன்பை விட இம்முறை அமைச்சரவை சற்றுப் பெரிதாக அமைந்திருப்பதாய் பிரதமர் வோங் சொன்னார்.

நிச்சயமற்ற சூழலில் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்ல செயல்திறன்மிக்க அரசாங்கத்தை அமைக்கத் தாம் முயற்சி செய்திருப்பதாய் அவர் கூறினார்.

சிங்கப்பூரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சிறந்த வருங்காலத்தை உறுதிசெய்ய இயன்ற அனைத்தையும் செய்யவிருப்பதாகத் திரு வோங் உறுதியளித்தார்.

தமக்கும் தம் குழுவுக்கும் முழு ஆதரவு நல்கும்படி அவர் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்கள், மூத்த துணையமைச்சர்கள், துணையமைச்சர்கள் ஆகியோருக்கான பதவியேற்புச் சடங்கு நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது. மூத்த நாடாளுமன்றச் செயலாளர்களுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி வேறொரு தேதியில் இடம்பெறும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்